முகத்துவாரம் (மோதறை) அளுத்மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (10) பிற்பகல் முகத்துவாரம் அளுத்மாவத்தை அடுக்கு மாடிக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் முச்சக்கரவண்டியில் வந்தோர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த ஐவரும் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஒரு பெண் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளதோடு அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சம்பவத்துடன் தொடர்பான சந்தேகநபர்கள் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top