(அகமட் எஸ். முகைடீன்)

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசின் முயற்சியினால் இஸ்லாமபாத் பிரதான வீதி காபட் வீதியாக புனரமைக்கப்படும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (1) சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தகர் பி.ரி ஜமால் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.  

முன்னாள் பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் 1.8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீதி காபட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது. 

ஹரீஸ் அவர்கள் கல்முனை மாநகர முதல்வராக இருந்தகாலப்பகுதியில் இவ்வீதி தார் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டதோடு தற்போது அவரது முயற்சியினால் காபட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

கருத்துரையிடுக

 
Top