அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஏழு வருடங்களாக பல்வேறு வகையான சமூக சேவைகளில் ஈடுபட்டு  இயங்கிவருகின்ற கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் வருடாந்த பொது ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை (22) இறக்காமம் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. 
இவ்வருடாந்த ஒன்றுகூடலின் போது 2019 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்  தெரிவு  இடம்பெற்றது. இதன் போது இவ்வமைப்பின் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக இலங்கை கல்வி நிர்வாக சேவை  அதிகாரி   என்.எம்.ஏ மலீக் தெரிவு  செய்யப்பட்டதோடு செயலாளராக  எஸ்.ரீ. சதாத் , பொருளாளராக ஏ.ஏம்.இர்ஷாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர் .
இதனைத் தொடர்ந்து இவ்வமைப்பின் புதிய தலைவர்  என்.எம்.ஏ மலீக் உரையாற்றும போது போது 2018 ஆம் ஆண்டில் சிறப்பாக இவ்வமைப்பை வழி நடாத்திய நிர்வாகத்தினருக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்ததோடு எதிர்வரும் வருடத்தில் இவ்வமைப்பை சிறப்பாக வழி நடாத்தி இப்பிரதேச மக்களுக்கு தேவையான சேவைகளில் ஈடுபட அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பு இன்றியமையாதது எனவும்  தெரிவித்தார் .

செஸ்டோ”99” அமைப்பானது இப்பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாக இருந்த ஜனாஸாக்களை ஏற்றிச் செல்லும் அம்பியூலன்ஸ் வண்டியை கொள்வனவு  செய்து அதன் மூலம் பாரிய சமூக சேவையில் ஈடுபட்டு வருவததோடு மக்களின் தேவைகளாக உணரப்படும் பல்வேறுபட்ட சமூக சேவைகளையும் ஆற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது 
செஸ்டோ”99”  அமைப்பின் இணையதளம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதோடு 2018 ஆம் ஆண்டில்  சிறப்பாக செயற்பட்ட  உறுப்பினர்களுக்கான  நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.  கருத்துரையிடுக

 
Top