கிழக்கு மாகாணத்தில் வர்த்தக மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு  மேலும் 5 செலான் வங்கிக்கிளைகளை  ஆரம்பிக்கவுள்ளதாக  செலான் வங்கி பிராந்திய முகாமையாளர் எஸ்.முதாதிஸ்ஸ தெரிவித்துள்ளார் .

கல்முனை செலான்  வங்கிக் கிளையின் 7வது  ஆண்டு நிறைவு விழா  வங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் சாய்ந்தமருது சீ பிரீஸ் விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (04.12.2018) நடை பெற்றது.இந்நிகழ்வில் கிழக்குப்பிராந்திய முகாமையாளர் எஸ்.முதாதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார் .
இலங்கையில் 168 செலான் வங்கி  கிளைகள் இயங்குகின்றன . அதில் கிழக்கு மாகாணத்தில் 11 கிளைகள் இயங்கும் நிலையில் கிழக்கின் வர்த்தக மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு மேலும் 5 கிளைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இலங்கையில் இயங்கும் செலான் வங்கிகளுக்குள் கல்முனை கிளை 4ஆம் தரத்தில் காணப்படுகிறது கல்முனை கிளையின் சிறந்த செயற்பாட்டின் அடிப்படையில் அடுத்த ஆண்டு 3ஆம் தரத்துக்கு உயர்த்துவதற்கும் வாங்கி நிருவாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார் .

ஏழாண்டு நிறைவைக்கொண்டாடும்  நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி  ஏ.எம்.றகீப் உட்பட வாடிக்கையாளர் பலரும் கலந்து கொண்டதுடன் 7ஆண்டு நிறைவு கேக் வெட்டி  இராப்போசன நிகழ்வுடன் நிறைவடைந்தது.

கருத்துரையிடுக

 
Top