கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில்  தரம் ஐந்து பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு கல்முனை செலான் வங்கி கிளையின் ஏற்பாட்டில் நேற்று கல்முனையில் நடை பெற்றது .

வங்கி முகாமையாளர்  பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை  வலயக்கல்விப் பணிப்பாளர் ஜலீல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கி வைத்தார்  

நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த  திருச்சபை போதகர் அருட்சகோதரர் எஸ்.டி .வினோத் ,வேல்ட் விஷன் திட்டமுகாமையாளர்  எஸ்.செல்வபதி ,அர்ஷாத்  டெக்ஸ் டைல்ஸ் உரிமையாளர் எம்.எச்.எம்.இப்ராஹிம் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர் .கருத்துரையிடுக

 
Top