தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட தற்போதைய பாராளுமன்றம் தொடர்ந்து தனது பணிகளை முன்னெடுக்கும் என்று பெருந்பெருக்கள் மற்றும் வீதி அபிவருத்தி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். 

ஸ்ரீ அபிநாவாராம விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எதுவித பிரச்சனைகளும் இன்றி தொடர்ந்தும் செயல்படும் என்று தெரிவித்த அமைச்சர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின் தீர்ப்புக்கு அமைவாக எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றால் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் அரசாங்கம் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 

தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட தற்போதைய பாராளுமன்றம் 2020ம் ஆண்டு வரையில் தனது பணிகளை முன்னெடுக்கும். 

கருத்துரையிடுக

 
Top