கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீளமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 

இன்று (29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து, அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். 

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை பெறக்கூடியவர் என நீங்கள் கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பட்ட கடிதத்தை மேலே காணலாம்

கருத்துரையிடுக

 
Top