எதிர்வரும் வாரத்தில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய நபர்களின் பெயர் பட்டியல் வௌியிடப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

மத்திய வங்கியின் அறிக்கை வௌியிடப்படும் போது எவ்வளவு பேர் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை கண்டுகொள்ளலாம் என அவர் மேலும் கூறினார். 

இன்று ஐக்கிய தேசிய கட்சியினால் ஒவ்வொரு இடங்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், மத்திய வங்கி மோசடியுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரம் வௌியானவுடன் அதுவும் நின்றுவிடும் என்று அவர் கூறினார். 

இதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன அண்மையில் தெரிவித்தாகவும் லக்ஷமன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top