பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி செயலகத்துக்கு  வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் அனைத்து கட்சி உறுப்பினர்களும் வருகை தந்துள்ளதை அடுத்து தற்போது கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

5.08 P.M - ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகின்றது 

பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. 

சபாநாயகர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த சந்திப்பிற்கான ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top