நாடாளவிய ரீதியில் 250 கிராமிய பாலங்களை அமைக்க நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. 

இதற்கென 52 தசம் ஒரு மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்க நெதர்லாந்து அரசாங்கம் இணங்கியுள்ளது. 

கடன் உதவி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல கைச்சாத்திட்டுள்ளார். 

தூர பிரதேசங்களிலுள்ள கிராமிங்களுக்கும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை வழங்கும் நோக்குடன் தேசிய வீதிப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கிறது. 

இந்த வேலைத்திட்டம் மாகாண சபைகள், சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

இந்த நிதியிலாவது அம்பாறை மாவட்டத்திலுள்ள கிட்டங்கி பாலம் நிர்மாணிக்கப்படுமா என்ற ஆவலோடு அப்பிரதேச மக்கள் காணப்படுகின்றனர் தான் அங்கீகரித்த கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தை .பிரதமர் மகிந்தராஜபக்ஸ  நிறைவேற்றுவாரா?

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

 
Top