"மிருக விசர் நோய் தடுப்பு மூலம்  மனிதனை விசர் நோய் மிருகக் கடியிலிருந்து பாதுகாக்கலாம் " என்ற தொனிப்  பொருளில் கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் விசர்  நோய் தடுப்பு வாரம்  திங்கட் கிழமை (29) தொடக்கம்  நடை பெற்று வருகின்றது 

கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பிரதேசத்தில் உள்ள நாய் மற்றும் பூனை போன்ற மிருகங்களுக்கான விசர் நோய்  தடுப்பு நிகழ்ச்சி திட்டம்   நேற்று  (திங்கட் கிழமை) தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை  (02) வரை  அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள 20 கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிராந்திய அலுவலகங்களில் நடை  பெற்று வருகின்றது 

இதன் ஆரம்ப நிகழ்வு கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்கள கல்முனை காரியாலயத்தில் கால் நடை உற்பத்தி சுகாதார வைத்தியர்  டொக்டர் ஏ.தையுபா தலைமையில் வீட்டுப் பிராணிகளுக்கான கருத்தடை  சத்திர சிகிச்சை இடம் பெற்றது .

வீட்டுப் பிராணிகளுக்கு கல்முனை பிரதேசத்தில் 90 வீத தடுப்பூசி போடப்படப்படுள்ளதாகவும் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில்  கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொள்வதாகவும் கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் விசர்  நோய் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப் பட்டதன்  மூலம்  முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் மேலும்  தெருநாய்களை  பிடித்து தடுப்பூசி மற்றும் கருத்தடை சிகிச்சை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் ஏ.தையுபா மேலும் தெரிவித்தார் .

இத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் விசர் நோய் பரவுவதை முற்றாக ஒழிப்பதே கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் திட்டமாக அமைந்துள்ளது . கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் டொக்டர் எம்.ஏ.நதீர் மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கை காரணமாக அம்பாறை மாவட்டதில் இன்னும் குறிப்பிட்ட  காலத்துக்குள் விசர் நோய்  முற்றாக தடை செய்யப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் எமது திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி இந்த பயங்கர நோயை இல்லாதொழிக்க உதவ வேண்டும் எனவும் கல்முனை  கால் நடை உற்பத்தி சுகாதார வைத்தியர்  டொக்டர் ஏ.தையுபா  மேலும் தெரிவித்தார் .


கருத்துரையிடுக

 
Top