எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக ஆற்று மண் ஆகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர்கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இதற்காக பயன்படுத்திய ஒரு உழவு இயந்திரமும்ஒரு டிப்பர் வாகனமும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக சவளக்கடைபொலிஸார் தெரிவித்தனர்.
சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி .எம்.எம்.நஜீம் தலைமையிலானகுழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நாவிதன்வெளி பிரதேசத்தினை சேர்ந்த ஒரு உழவு இயந்திரமும் சம்மாந்துறையை பிரதேசத்தினை  சேர்ந்த ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய இரு நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு நபர்களையும்கைப்பற்றப்பட்டுள்ள இரு வாகனங்களையும் சம்மாந்துறை நீதவான்நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


கருத்துரையிடுக

 
Top