கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் யூ.எல்.எம் அமீன் கல்முனை கமு /கமு /மஹ்மூத் மகளீர் கல்லூரியின்  அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் 
 கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால்  எதிர்வரும் 2019 ஜனவரி 02ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றும் யூ.எல்.எம் அமீன் இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தரத்தை சேந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மஹ்மூத் மகளீர் கல்லூரியின் அதிபர் வெற்றிடத்திற்காக நடத்தப்பட்ட நேர்முக பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையில் சித்தியடைந்தமைக்காக இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top