அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. 

இன்று (27) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ள அமைச்சரவைக் கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இன்று பகல் 01 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியதுடன், மீண்டும் 29ம் திகதி வரையில் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top