கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் திரவப்பால் அருந்துவதை ஊக்குவிக்கும் திட்டமொன்றை அமுல் படுத்தி வருகின்றது.

அத்திட்டத்தின் அடிப்படையில் பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள்பபட்டு 03 தினங்களுக்கு தரம் 03,04 வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக திரவப்பால் வழங்கப்படுகின்றது.

முதல் கட்டமாக கல்முனை கல்வி வலயத்தில் இனங்காணப்பட்ட 9 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான திரவப்பால் வினியோகம்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை அரச கால் நடை வைத்திய அதிகாரி தையூபா அசனார் தலைமையில் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் நடை பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் Dr .எம்.ஏ.நதீர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திரவப்பால் பொதியை வழங்கி வைத்தார். நிகழ்வில் கல்லூரி அதிபர் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் .  
கருத்துரையிடுக

 
Top