ஜனாதிபதி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவருதல், பிரதமரை நியமித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதாகும் என்று முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியளார் சந்திப்பில் முன்னாள் சபாநாயகர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், 

ஜனாதிபதி பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்த பின்னர் சபாநாயகர் அதிகாரமற்றவராக அமைவார் என்றும், அவ்வாறான நிலையில் அவர் தெரிவிக்கும் கூற்றுக்கள் சபாநாயகர் கூற்றாக அமையாது என்றும் முன்னாள் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பாராளுமன்ற கூட்டத் தொடரின் காலம் நிறைவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும்பொழுது அதற்கு தலைமை தாங்குபவர் ஜனாதிபதியே ஆவார் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இக்காலப்பகுதியில் சபாநாயகர் பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசியல் யாப்புக்கு முரண்பட்டதாகும் . 

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தாம் சபாநாயகராக பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமை எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், எப்பொழுதும் அரசியல் யாப்பை பாதுகாப்பதற்கு செயற்பட்டதாகவும் கூறினார். 

பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்தலை, பாராளுமன்றத்தை கூட்டுவதற்காக அழைப்பு விடுத்தல், அல்லது கலைத்தல் போன்றவற்றுக்கான அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டுள்ளார் . 

முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்த்தனவே அரசியல் யாப்பை ஏற்படுத்தினார். அந்த யாப்பு இன்றும் செல்லுபடியானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரச தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

 
Top