எல்.ரி.ரி.ஈ அமைப்பை விளம்பரப்படுத்தும் விதமான நினைவு தினங்களை இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். 

யாழ். பல்கலைகழக மாணவர்கள் மாவீரர் நினைவு தினம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோப்பாய் பொலிஸார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். 

நேற்று (21) குறித்த கோரிக்கை சமர்பிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார். 

குறித்த கோரிக்கை தொடர்பான தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

 
Top