ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

அதனடிப்படையில் புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி இன்று (04) 2 புதிய அமைச்சர்கள், 1 இராஜாங்க அமைச்சர் மற்றும் 1 பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு, 

அமைச்சர்களின் விபரம் 

பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு - தினேஸ் குணவர்தன 

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு - வாசுதேவ நாணயக்கார 

இராஜங்க அமைச்சரின் விபரம் 

வெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு - கெஹலிய ரம்புக்வெல்ல 

பிரதி அமைச்சரின் விபரம் 

கலாச்சாரம், உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்து அமைச்சு - அசோக பிரியந்த

கருத்துரையிடுக

 
Top