ஜனாதிபதியுடன் தனித்தனியாக உடன்படிக்கை ஒன்றை செய்து அரசுடன் இணைய ரவூப் ஹக்கீமும் , ரிசார்ட் பதியுதீனும் தீர்மானம் எடுத்துள்ளனர் .
அதன்படி ,பிராந்திய கட்சி முக்கியஸ்தர்களின் கருத்துக்களை கேட்டு முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கருத்திற்கொண்டு இப்போது உடன்படிக்கை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுகின்றன .
மு. கா வின் அதிஉயர்பீட உறுப்பினர் - முன்னாள் எம் பி சல்மான் இதற்காக தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்.. ரிஷாத் தரப்பிலும் சட்டத்தரணி ஒருவர் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்...
இன்று அல்லது நாளை காலைக்குள் தயார் செய்யப்பட்டு ஜனாதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமானால் நாளை மாலைக்குள் அமைச்சுப் பதவிகளை ஏற்க மேற்படி இரண்டு கட்சிகளும் முடிவு செய்துள்ளன..

கருத்துரையிடுக

 
Top