சிங்கப்பூரில் இருந்து சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் இலங்கையர் ஒருவர் நேற்று (17) இரவு கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

சிலாபம், கட்டுனேரிய பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் நேற்று (17) இரவு 9.10 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து  சிங்கப்பூர்  விமான சேவைக்கு  சொந்தமான UL 309 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். 

சந்தேக நபரிடம் இருந்து 10 லவ் பேர்ட்ச் உம், மேலும் விஷேட கிளி வகையை சேர்ந்த பறவைகள் 17 உம் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவை சுமார் 650,000 ரூபாய் பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தேக நபரிற்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அத்துடன் கைப்பற்றப்பட்ட பறவைகளை மீண்டும் சிங்கப்பூரிற்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

 
Top