கல்முனை உதவிப்  பிரதேச செயலாளர்  சீதாராமன் ஜெயரூபன்   இன்று  (18) ஞாயிற்றுக்  கிழமை  கொழும்பு  லங்கா ஹோஸ்பிடலில் காலமானார் . அவர் இறக்கும் போது  அவருக்கு வயது  34 ஆகும் 

இரண்டு  பிள்ளைகளின் தந்தையான  ஜெயரூபன்  பழுகாமத்தில் சீதாராமன் சிவ கெளரிக்கு  மகனாக  பிறந்து 2012 ஆம் ஆண்டு  அக்கரைப்பற்று  கோளாவிலில்  திருமணம் செய்துள்ளார். 2010 ஆம் ஆண்டில்  இலங்கை அரச நிருவாக சேவைக்கு தெரிவாகி  அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில்  உதவி பிரதேச செயலாளராக  முதல் நியமனம் பெற்ற  இவர் திருக்கோவில் பிரதேச செயலகத்திலும்  உதவி பிரதேச செயலாளராக  பணியாற்றி வந்தார் .

கடந்த  2018.08.15 ஆம் திகதி கல்முனை  பிரதேச செயலகத்துக்கு உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயரூபன்  சிறிது காலம் நோய்வாய்பட்டிருந்த நிலையில் இன்று  (18) காலமானார்.

அன்னாரது சடலம் இன்று  அக்கரைப்பற்றுக்கு எடுத்துவரப்பட்டு கோளாவில் மயானத்தில் நாளை  (19) அடக்கம் செய்யப்படவுள்ளது.

 


2 Attachments
 
 

கருத்துரையிடுக

 
Top