(யு.எம்.இஸ்ஹாக் )

இறந்தோரை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்ற மரித்தோரை நினைவு  கூர்ந்து  கிறிஸ்தவ சபைகளால்  கொண்டாடப் படுகின்ற சிறப்பு விழா  இதனைக்கல்லறைத் திருநாள் எனவும் அழைப்பர். கத்தோலிக்க திருச்சபை உட்பட பல கிறித்தவ சபைகள் இவ்விழாவை நவம்பர் 02 ஆந் திகதி உணர்வு  பூர்வமாக கல்லறைகளுக்குச் சென்று கொண்டாடி வருகின்றன.
கிழக்கு கிறித்தவ சபைகளின் கத்தோலிக்க திருச்சபை இந்நாளைச் சிறப்பாக நினைவு  கூர்கின்றது. மேலும்,ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் பழைய கத்தோலிக்க திருச்சபைகளும் இதனைக் கொண்டாடுகின்றன.
இறந்தோரை நினைவு கூர்ந்து, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறைவேண்டல் செலுத்தும் வழக்கம் "தூய்மை பெறும் நிலை" பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததாகும்.
தூய்மை பெறும் நிலையை கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நூல் இவ்வாறு விவரிக்கிறது
தூய்மை பெறும் நிலை என்பது கடவுளோடு நட்புறவில் இறந்து, நிலைவாழ்வு  உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும் நிலை ஆகும்
இந்த தூய்மை பெறும் நிலையைக் கத்தோலிக்க திருச்சபை "உத்தரிக்கிற ஸ்தலம்" அல்லது "உத்தரிப்பு ஸ்தலம்" என்று அழைப்பது பழைய வழக்கம் ஆகும்.

இறந்து உத்தரிப்பு நிலையில் வேதனைப்படும் உற்றார், உறவினர், நண்பர்களின் மற்றும் யாரும் நினையா ஆன்மாக்களை நினைவு  கூர்ந்து அவர்களுக்காக இந்நாளில் கிறிஸ்தவர்கள்  வேண்டுதல் செலுத்துகின்றனர். இவ்விழாவில் கல்லறைகள் மலர்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபையில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கல்லறைகளை சந்தித்து இறந்த விசுவாசிகளுக்காய் வேண்டுதல் புரிவோருக்கு முழு பலன் உண்டு என நம்பப்படுகின்றது.
அதன் அடிப்படையில் கிறிஸ்தவர்களின் கல்லறைத் திரு விழா கல்முனை கிறிஸ்தவ மயானத்தில் சனிக்கிழமை (02) மிக சிறப்பாக நடை பெற்றது. கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத் தந்தை  அருட் தந்தை ஜேசுதாசன்  அடிகளார் தலைமையில்  நடை பெற்ற கல்லறைத் திரு விழாவில்  அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள் உட்பட உயிர் நீத்தவர்களின் உறவுகள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்தனையில் ஈடு பட்டனர். அத்துடன் இறந்தவர்களின் நினைவாக திருப்பலி பூசையும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.கருத்துரையிடுக

 
Top