2019ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்குறிய சீருடைத் துணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. 

பாடாசலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளுக்கான வவுச்சர் வழங்கிய முறைக்குப் பதிலாக துணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுத்துள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. 

சீருடைத் துணிகளுக்குப் பதிலாக வவுச்சர் வழங்கும் முறையினால் ஆண்டொன்றிற்கு 550 மில்லியன் ரூபா மேலதிக செலவினம் ஏற்படுவதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. 

அத்துடன் மாணவர்களின் பெற்றோருக்கும் மேலதிக செலவினம் ஒன்றை ஏற்க வேண்டியுள்ளதாக அந்த அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாணவர்களுக்கான வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகளை வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு கல்வியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.

கருத்துரையிடுக

 
Top