வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் 

(பி.எம்.எம்.ஏ.காதர்)
எத்தனை கல்வியலாளர்களும் உருவாக்கப்படலாம் ஆனால் ஆளுமைமிக்க கல்வியலாளர்கள் உருருவாக்கப்படும் போதுதான் சமூகம் போதியளவு  பயனைப் பெறும். இவ்வாறான பயிற்சிப்பாசறைகள் மாணவர்களுக்கு கட்டாயம் நடாத்தப்பட்டு இவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட வேண்டும் என கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் சென்.ஜோன் அம்பியுலன்ஸ் முதலுதவிப் பிரிவின் வருடாந்த பிரிவுப் பாசறை கடந்த திங்கள் கிழமை
(29-10-2018) பாடசாலையின் திறந்த வெளியரங்கில் அதிபர் ஏ.எல்.சக்காப் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வறு தெரிவித்தார். 
இந்த நிகழ்வில்.கௌரவ அதிதியாக சென்.ஜோன் அம்பியுலன்ஸ் முதலுதவிப் பிரிவின் மாவட்ட ஆணையாளர் எம்.எச்.எம்.மன்சூர், விஷேட அதிதியாக கல்லூரியின் பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஷாரப், அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலை அதிபா; எம்.எல்.எம்.மஹ்றூப், உதவி மாவட்ட ஆணையாளா; லெப்டினன்ட் எம்.எஸ்.எம்.மிப்றாஸ்கான் ஆகியோருடன் உதவி அதிபர்களும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :-இன்றைய நவீன உலகத்தின் சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் தன்னம்பிக்கையையயும், ஆளுமைகளையும் மாணவர்களுக்கு போதிக்கும் வகையில் கல்விச் செயற்பாடுகளும், இணைப்பாடவிதான செயற்பாடுகளும் அமைய வேண்டும். பரந்து பட்ட இன்றைய உலகின் செயற்பாடுகள் பெரும் சவாலாக உள்ளது இதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும். 
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி பாடவிதானம் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை திறம்பட திட்டமிட்டு செய்யக்கூடிய பாடசாலையாக திகழ்வது யாவரும் அறிந்ததே இச்செயற்பாடுகளால் மாணவர்களிடத்தில் சிறந்த ஒழுக்கமும் சமநிலை அளுமையும் விருத்தியடைகின்றது என்றார்.


இப்பாசறையில் கல்லூரியின் முதலுதவி பிரிவின் ஆண் மாணவர்கள் 52 பேரும் பெண் மாணவிகள் 43 பேரும் மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலை மாணவர்கள் 20 பேரும் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் 11 பேரும் இவர்களின் பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர் .இவ் வைபவத்தினை பிரிவு  அத்தியட்சகர் அசிரியர் எம்.ஐ.எம்.சுல்பிகார், பிரிவு  அதிகாரிகளான ஆசிரியர் எம்.ஏ.பா;ஸான், ஆசிரியை எஸ்.எச்.றிஹானா பானு, அலுவல அதிகாரிகளான ஐ.எம்.இனாபா நஸ்ஹத் மற்றும் எச்.ஆர்.றஹ்னா ஆகியோர் ஒழுங்குபடுத்தியிருந்தனர். மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கருத்துரையிடுக

 
Top