கல்முனை மாநகர சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பான புதிய உறுப்பினர் ஏ.எல்.றபீக் இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.நவாஸ், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அஹ்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினராக பதவி வகித்து வந்த இசட் ஏ.எச்.ரஹ்மான், மீண்டும் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டதைத் தொடர்ந்து, உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். அவ்வெற்றிடத்துக்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரின் பரிந்துரையின் பேரில் றபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நற்பிட்டிமுனை வட்டாரத்தில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top