எதிர்வரும் தினங்களில் ஆழ்கடல் பகுதியில் காலநிலை சீரற்றதாக காணப்படும் என்பதினால் கடற்றொழிலாளர்கள் கடல்நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 


எதிர்வரும் தினங்களில் பெரும்பாலான இடங்களில் கடும் மழைபெய்யக்கூடிய காலநிலை காணப்படுகின்றது. எதிர்வரும் 5ஆம் திகதி முதல் இந்த நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்ககூடும். இது அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்ககூடும். இதற்கமைவாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்தல் மற்றும் கடல்நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை மலையக பிரதேசங்களில் விசேடமாக மண்சரிவு இடம்பெறக்கூடிய பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும். மலைப்பிரதேசப்பகுதிகளில் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஏதேனும் அவரச தேவைக்கு அப்பிரதேசங்களிலுள்ள அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இடிமின்னல் தொடர்பாகவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடிமின்னல் மழையின் போது கடும் காற்று மழையும் வீசக்கூடும். அரச தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

 
Top