இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கவலையடைந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 

அது அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 

இந்த நாட்டில்  இனவாதம் தலைவிரித்தாடி சிறுபான்மையினர் அழிக்கப்பட்டபோது  ஏற்படாத அக்கறையும் கவலையும் இப்போது அமெரிக்காவுக்கு  ஏற்பட்டுள்ளது .  

அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் உறுதியான பங்காளர் என்ற வகையில், ஸ்திரத்தன்மை, சுபீட்சத்தை உறுதிபடுத்த ஜனநாயக நிறுவனங்கள், நடவடிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று நாம் கருதிகிறோம் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. .

கருத்துரையிடுக

 
Top