எதிர்வரும் டிசம்பர் மாதம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில், 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதுவரை மூன்று இலட்சத்து 95 ஆயிரம் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார். 

இவற்றில் மூன்று இலட்சத்து 92 ஆயிரம் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதுவரை பரீட்சார்த்திகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின், இது தொடர்பில் உடனடியாக தெரியப்படுத்துமாறு, திணைக்களம் பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

 
Top