அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சினால் 46 கணக்காளர்களுக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

2019.01.01 திகதி தொடக்கம் அமுல்படும் வகையில் இடமாற்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதன் பிரகாரம் கிழக்கு மாகாண சபை கணக்காளராக பதவி வகிக்கும் கணக்காளர் ஏ.எம்.மொஹமட் ரபீக் அம்பாறை மாவட்ட செயலகத்துக்கும் அம்பாறை மாவட்ட செயலக கணக்காளராக பதவி வகிக்கும் எம்.ஐ.எம்.முஸ்தபா கிழக்கு மாகாண சபை கணக்காளராகவும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதுடன்,

நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளராக பதவி வகிக்கும் வை.ஹபீபுல்லா கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்கும் கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளராக பதவி வகிக்கும் றிஸ்வி யஹ்சர் நாவிதன்வெளி பிரதேச செயலாளராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர் .சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜ்முதீன் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கணக்காளராகவும் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கணக்காளராக பணியாற்றிய கே.எல்.பஸீல் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top