ஆன்மீக அமைப்புக்களில் மிக தொன்மை வாய்ந்ததொரு அமைப்பாக அம்பாறை மாவட்டத்தில் இயங்கி வரும் கல்முனை சைவமகா சபையின் பொன் விழா மலர் வெளியீடும் 50ஆண்டு நிறைவு  விழாவும் கல்முனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தில் (28) ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது.

சைவமகா சபைத் தலைவரும் ஓய்வு  நிலை இலங்கை வங்கி  உயரதிகாரியுமான  வித்தகர் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்  தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தஜீ மகராஜ், பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சைவ மகா சபை  முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக் குருக்களினால் கல்முனை சைவ மகா சபை பொன் விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. மலரின் முதல் பிரதியை ஆன்மீக அதிதியாக கலந்து கொண்ட  மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்  தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தஜீ மகராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் நடன ஆசிரியை கலா வித்தகர் நுண்கலைமானி  திருமதி மதிவதனி சுரேஸ்குமார் கௌரவிக்கப்பட்டதுடன், சைவமகா சபை அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

கருத்துரையிடுக

 
Top