கல்வி அமைச்சின்  வழி காட்டலில்  நடை பெறும்  ஆசிரியர் அதிபர்
மதிப்பளிக்கும் இவ்வருடத்துக்கான  குரு பிரதீபா பிரபா விருது பெற கல்முனை
கல்வி வலயத்தை  சேர்ந்த  ஆறு ஆசிரியர்கள் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .

சாய்ந்தமருது அரச முஸ்லிம் கலவன் பாடசாலை ஆசிரியை திருமதி சுபைதா
மொகம்மட்  இப்ராஹிம் , மாளிகைக்காடு அல் -ஹுசைன்  வித்தியாலய ஆசிரியை
திருமதி எஸ்.எச்.மொஹம்மட் றபீக் ,காரைதீவு  சண்முகா மகா வித்தியாலய
ஆசிரியை  திருமதி புவனேஸ்வரி ஜெயகனேஷ் ,கல்முனை  உவெஸ்லி உயர்தர பாடசாலை
ஆசிரியை திருமதி எஸ்.மோகன்,சாய்ந்தமருது அல் -ஹிலால் வித்தியாலய அதிபர்
எம்.எல்.மொஹம்மது பைசால் ,நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய ஆசிரியர்
எம்.எஸ்.கபீர்  ஆகிய  ஆறுபேரும் குரு பிரதீபா பிரபா விருது பெறவுள்ளனர் .

இந்த விருது வழங்கும் விழா நாளை   வெள்ளிக்கிழமை (05) காலை
10.00 மணிக்கு  பண்டார நாயக்க  சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடை
பெறவுள்ளது.

கருத்துரையிடுக

 
Top