(யு.எம்.இஸ்ஹாக்)
"மிருக விசர் நோய் தடுப்பு மூலம் மனிதனை விசர் நோய் மிருகக் கடியிலிருந்து பாதுகாக்கலாம் " என்ற தொனிப் பொருளில் கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் விசர் நோய் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
எதிர் வரும் விசர் நோய் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பிரதேசத்தில் உள்ள நாய் மற்றும் பூனை போன்ற மிருகங்களுக்கான விசர் நோய் தடுப்பு நிகழ்ச்சி திட்டமொன்று இம்மாதம் 29ஆம் திகதி (திங்கட் கிழமை) தொடக்கம் நவம்பர் 02 ஆம் திகதி வரை அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள 20 கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிராந்திய அலுவலகங்களில் நடாத்த தீர்மானித்துள்ளதாக அம்பாறை மாவட்ட கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.ஏ.நதீர் தெரிவித்தார்.
கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த காலங்களில் 21ஆயிரத்து ஐநூறு டோஸ் மருந்தளவு விசர் நோய் தடுப்புக்களுக்கும் , 50 விசர் நோய் மிருக கருத்தடையும் செயப்பட்டுள்ளதோடு மேலும் நாடு பூராகவும் கடைப்பிடிக்கப்படவுள்ள விசர் நோய் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு விசேடமாக 15ஆயிரம் டோஸ் மருந்தளவு விசர் நோய் தடுப்புக்களையும் 150 விசர் நோய் மிருக கருத்தடையையும் செய்வதற்கு தயாராகியுள்ளோம் என அம்பாறை மாவட்ட கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.ஏ.நதீர் மேலும் தெரிவித்தார்.
மேலும் விசர் நோய் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு விசர் நோய் தடுப்பு தொடர்பான அறிவூட்டல்களை பாடசாலை மாணவர்களுக்கும் , பொது மக்களுக்கும் வழங்கும் அதே வேளை எதிர்காலத்தில் இது தொடர்பான பல முன்னேற்ற நடவடிக்கைகளையும் மக்களை பாத்து காக்கும் திட்ட்ங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .
இம்மாதம் 29ஆம் திகதி (திங்கட் கிழமை) தொடக்கம் நவம்பர் 02 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் தங்களது வீடுகளில் உள்ள நாய் மற்றும் பூனை போன்ற மிருகங்களினை தங்கள் வசிப்பிடத்துக்கு அண்மையில் உள்ள கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிராந்திய அலுவலகங்களுக்கு எடுத்துச் சென்று விசர் நோய் தடுப்பினை செய்வதோடு விசர் நோய் மிருக கருத்தடையும் செய்து கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட பொது மக்களை அம்பாறை மாவட்ட கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.ஏ.நதீர் கேட்டுக்கொண்டுள்ளார்

கருத்துரையிடுக

 
Top