நமது நாட்டில் தேசிய ரீதியில் இலக்கியப் பணிக்காக வழங்கப்படுகின்ற அதியுயர் இலக்கிய விருதான “சாஹித்திய மண்டல ” விருதினை மூன்றாவது தடவையாகவும் பெற்றுக் கொண்ட கல்முனையைச் சேர்ந்த உலக கவிஞர் சோலைக் கிளி என அழைக்கப்படும் அதீக் கல்முனை பிரதேச கலாச்சாரப் பேரவையினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இந்தப் பாராட்டு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) கல்முனை பிரதேச கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச கலாச்சாரப் பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான ஏ.எச்.ஏ.கனி தலைமையில் நடை பெற்றது. 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட தமிழ் துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா ,உலக சிறு கதை எழுத்தாளர் உமாவரதராஜன்,தமிழ்த் துறை ஆசிரியர் அஷ்ர ஃ ப் ,சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.சாலிஹ் உள்ளிட்ட இலக்கிய பிரமுகர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டு சோலைக்கிளிக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் அகிலா பானு வாழ்த்துரை வழங்க கலாநிதி எஸ்.எல்.ஏ.அஸீஸ்  நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.

கருத்துரையிடுக

 
Top