கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நவராத்திரி விழாவின் வாணி விழா வழிபாடு பெறியியலாளர் ஜீ.அருண் தலைமையில் இன்று (16)இடம் பெற்றது

கல்முனை வலய கல்வி அலுவலக பிரதிக் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ் உமர்மௌலானா பிரதம அதிதியாகவும் , வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர்  கலந்து கொண்டனர்.

நிழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் சஞ்சீவ.சிவகுமார் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சைவ நற்சிந்தனை சிறப்புரை நிகழ்த்தினர்.

வலயக் கல்வி அலுவலக மண்டபத்தில் இடம் பெற்ற வாணி விழா பூசை வழிபாடுகள் பெரியகல்லாறு மண்டபத்தடி பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிரியா திலகம் த.விஜயவர்மக் குருக்கள் தலைமையில் இடம் பெற்றதுடன் பாடசாலை மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இடம் பெற்றன. 

இன மத பேதமின்றி வருடந்தோறும் நடை பெற்று வருகின்ற வாணி விழா நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட ஆசிரிய ஆலோசகர்கள் , அதிபர்கள் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவிகளுக்கு பரிசளிப்பும் இடம் பெற்றது.

கருத்துரையிடுக

 
Top