இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின்   கல்முனை  பிராந்திய  சங்க  வருடாந்த  பொதுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிறுக்கிழமை (14)  நிந்தவூர் அட்டப் பள்ளம்  தோம்புக்கண்ட  விடுதியில் நடை பெறவுள்ளது .

சங்கத்தின் தலைவர்  சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெரீன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில்  மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார் .

 கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்  ஏ.அருள்குமரன் ,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன் ,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்  பிரதிப் பணிப்பாளர் டாக்டர்.ஏ.ஏ.இஸ்ஸடீன்  உட்பட இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின்  தலைவர் எம்.ஜீ.யு.ரோஹண  ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் 

கருத்துரையிடுக

 
Top