நற்பிட்டிமுனை கிராமத்தில்  கடந்த ஆண்டு (2017) கல்வித் பொது தராதர சாதாரண பரீட்சையில் திறமை சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டும்  நிகழ்வு நேற்று   செவ்வாய்க்கிழமை (28) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடை பெற்றது.

நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  ஏற்பாட்டில் நடை பெற்ற  நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சாதனை மாணவர்களை பாராட்டி கெளரவித்தார் .

நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  தலைவரும் வணிக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளருமான சி.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற  இந்த நிகழ்வில் கல்முனை கல்வி வலய பாடசாலைகளில் கல்வி கற்ற  நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த 14 மாணவர்கள் பாராட்டிக் கெளரவிக்கப் பட்டனர் .

இந்த  கெளரவிப்பு நிகழ்வில்  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.ஜீ.கே.முத்துபண்டா ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் , உட்பட பாராட்டுப் பெற்ற  மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு சிறப்பிப்பித்தனர் .

கருத்துரையிடுக

 
Top