கல்முனை அஷ்ரப்  ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட  பெண் நோயாளி ஒருவரின் உணவுக்கால்வாயில் இருந்து ஒன்றரைக் கிலோ எடையுடைய தலை முடி சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது . இச்சம்பவம்  கடந்த சில தினங்களுக்கு முன்னர்   இடம் பெற்றுள்ளது பெற்றுள்ளது.

17வயதுடைய யுவதி  ஒருவர் தொடர்ந்து வாந்தி நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில்

கல்முனை அஷ்ரப்  ஞாபகார்த்த வைத்திய சாலையில்

அனுமதிக்கப் பட்ட போது வைத்திய சாலை சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் ஏ.டபிள் .யு. சமீம் நோயாளியை சோதனைக்குட்படுத்திய போது  அவரது வயிற்றில் உட்பகுதியில் கட்டி  போன்று தென்பட்டுள்ளது. நோயாளியின் இரைப்பை  பகுதியை எண்டஸ்கோபி  கமரா மூலம் சோதனை செய்த சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர்  சமீம் நோயாளியின் உணவுக்கால்வாயில் தலை முடி இருப்பதை உறுதி செய்ததன் பின்னர் அவசரமாக நோயாளியை சத்திர சிகிச்சைக்குட்படுத்துயுள்ளார் .


இதன் போதே நோயாளியின் வயிற்றில் இருந்து ஒன்றரைக் கிலோ எடை கொண்ட முடி அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சம்பவம் தனக்கு முதல் அனுபவம் என்றும் இலங்கையில் இவ்வாறானதொரு சத்திர சிகிச்சை இடம் பெற்றிருக்க முடியாது எனவும் சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் தெரிவித்தார் .


இந்த சத்திர சிகிச்சை தொடர்பாக வைத்திய நிபுணர் கருது தெரிவிக்கையில்  இந்த  முடியானது  நோயாளியின் இரைப்பை, முன் சிறுகுடல், சிறு குடல் வடிவில் வடிவமைக்கப்பட்டு காணப்பட்டிருந்தது. இவர் பல நாட்களாக முடியை உட்கொண்டிருக்க வேண்டும்.பொதுவாக மிருகங்களுக்கே இவ்வாறான முடி அடைப்பு நிகழ்வுகள் நடக்கின்றன.
மனிதர்களில் இவ்வாறு முடியை உற்கொண்டு வருவது மிகவும் அரிது. மன நோயாளர்களே இவ்வாறு முடியை உட்கொள்கின்றனர் என தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top