(பி.எம்.எம்.ஏ.காதர்)
கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவு  செய்யப்பட்டுள்ள மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்பைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  நாளை(08-05-2018)மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பெரிய நீலாவணை  நெசவாளர் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்த கெரவிப்பு நிகழ்வு  மன்றத்தின் ஆலோசகர் ஏ.அர் எம்.சாலிஹ்வின் நெறிப்படுத்தலில்   தலைவர் ஏ.எல்.சபுறுத்தீன் தலைமையில் நடைபெவுள்ளது.
இந்த நிகழ்வில் பெரிய நீலாவணை  நெசவாளர் சமூக சேவை மன்றத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனியும் கௌரவிக்கப்படவுள்ளார்.
இங்கு மன்றத்தின் உறுபினர்களும் கலந்து கொள்ளவு ள்ளனர்.   

கருத்துரையிடுக

 
Top