அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட 'ஏ' பிரிவு 8 அணிகள் பங்கு பற்றிய இலங்கை இராணுவ கிண்ண − -2018 உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கல்முனை சனிமெளன்ட் விளையாட்டுக் கழகம் 2:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று
இலங்கை இராணுவ கிண்ண− -2018 சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இவ்விறுதிப்போட்டி கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த (30) கல்முனை சனிமெளன்ட விளையாட்டுக்கழகம் மற்றும் மருதமுனை கோல்ட்மைன்ட் விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் எதிர்த்து பலப்பரீட்சை நடாத்தியது. முதல் பாதியில் கோல்ட்மைன்ட் அணியின் வீரர் ரிஷாப் கோல் ஒன்றை போட்டு தனது அணியை பலப்படுத்தினார்.
இரண்டாம் பாதி தொடங்கி ஆட்டம் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் வேளையில் சனி மெளன்ட் அணியின் முன்னாள் தலைவர் நிசார் கோல் ஒன்றை போட்டு சமநிலை படுத்தினார். தொடர்ந்து போட்டி சென்று கொண்டிருக்கும் போது மேலும் ஒரு கோலை சனி மெளன்ட் கழகத்தின் றில்வாத் பெற்றுக்கொடுக்க இறுதியில் சனிமெளன்ட் கழகத்தினர் 2:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான வெற்றிக் கேடயத்தை அதிதிகள் வழங்கி கெளரவித்தனர். 

கருத்துரையிடுக

 
Top