கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் “ஐக்கியமே பாக்கியம்” நடை பவனி இன்று(14) நடை பெற்றது.

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் அபிருத்திக் குழுவினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைபவனி கல்லூரியில் இவ்வருடம் நடை பெறவுள்ள ஒலிம்பிக் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியின் முதல்வர் எம்.எஸ்.முகம்மட் தலைமையில் நடை பெற்ற இந்த நடைபவனியை கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா ஆரம்பித்து வைத்தார்.

கல்லூரி கீதத்துடன் ஆரம்பமான “ஐக்கியமே பாக்கியம்” நடை பவனி பாடசாலை மைதானத்திலிருந்து அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி வழியாக மாளிகைக்காடு சந்தி வரை சென்று மீண்டும் சாய்ந்தமருதூடாக கல்முனை நகரை அடைந்து மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.

அழைப்பு இல்லாத இந்த நடை பவனியில் கல்லூரி பழைய மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

 
Top