கண்டி பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய பதற்றநிலை படிப்படியாக தணிந்து வழமை நிலைமைகக்கு திரும்பியுள்ளது.
கண்டி மாவட்டத்தின் நிலை சுமூகமாக காணப்படுவதாக மாவட்ட செயலாளர் எச்.எம்.பி.கிட்டிசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் கண்டி நிர்வாக மாவட்டத்தில் சுற்றுலாவை மேற்கொள்வதற்குரிய சூழ்நிலை இருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த 18 மணித்தியால காலப்பகுதிக்குள் எந்தவித மோதல் சம்பவமும் இடம்பெறவில்லை என்று சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துரையிடுக

 
Top