கண்டி மாவட்டத்தில் பதற்றத்தை தோற்றுவித்தவர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையானது எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பாடத்தினை கற்றுக்கொடுத்திருக்கும் என நம்புவதாக இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்;தார்.


கண்டியியில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நினைத்து பார்க்க முடியாத ஒரு சிறிய சம்பவம் ஒன்றினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களே இந்த பிரச்சினைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும் துரதிஸ்ட்ட வசமாக அந்த சிறிய சம்பவமானது பாரிய தூரத்திற்கு பயணித்துள்ளது இந்த வேளையில். இலங்கை கடற்படை, விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து, மக்களின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கட்சி பேதமின்றி இனபேதமின்றி முஸ்லிம் சிங்கள, மற்றும் தமிழ் மக்களின் பாதுகாப்பினை பாதுகாப்பு தரப்பினரே உறுதிபடுத்த வேண்டும். அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாங்கள் கண்டியின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பினை பலபடுத்தி நிலைமைய கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். 

தற்போது உங்களுக்கு பார்க்க முடியும், ஏற்கனவே காணப்பட்ட நிலையிலிருந்து பாரிய மாறுபாடான அதவது சுமூகமான நிலை காணப்படுகின்றது.

சில சில சம்பவங்கள் காணப்பட்டாலும், நாடு வீழ்ச்சியில் சென்றாலும் நாங்கள் இந்த கண்டியில் நிலைக்கொண்டுள்ளோம் ஏனெனில் மக்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்காகவே ஆகும்.

மேலும் நான் இராணுவத்தளபதியானாலும் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றேன்... கண்டியில் மிகவும் நல்லெண்ணம் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களிடத்தில் குரோதத்தை கட்டியெழுப்ப வெளிமாவட்டங்களிலிருந்து சிலர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் தரப்பில் அல்லது பாதுகாப்பினரின் தரப்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் மேற்கொள்வோம் என இராணுவத்தளபதி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top