40 பேர் உடல் கருகி பலி; 9 பேர் சிகிச்சை பலனின்றி பலி; 22 பேர் வைத்தியசாலையில்
பங்களாதேஷின் டாக்காவிலிருந்து 71 பேருடன் சென்ற பங்களாதேஷ் விமானம் ஒன்று நேபாள் நாட்டில் தரையிறங்கும்போது வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் அதில் பயணித்த 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 22 பேர் படுகாயங்களுக்குள்ளாகி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷில் இயங்கும் தனியாருக்குச் சொந்தமான, யுஎஸ்-பங்களா விமான சேவைக்குச் சொந்தமான BS 211 எனும் விமானம், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து நேபாள் தலைநகர் கட்மண்டுவிலுள்ள ட்ரிபுவான் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஓடு தளத்தில் பிழையான திசையில் தரையிறங்கியதன் காரணமாக குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தை அடுத்து, தீப்பிழம்புடன் வெடித்த விமானம் சாம்பரானதோடு, ஸ்லத்தில் உடல் கருகி நிலையில் 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதோடு, வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்ட நிலையில் 09 பேர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
67 பயணிகள் மற்றும் 4 விமான சேவையாளர்கள் உள்ளிட்ட 71 பேர் பயணம் செய்த இவ்விமானத்தில், 33 நேபாளியர்கள், 32 பங்காளிகள், 2 மாலைதீவர்கள் ஒரு சீனர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரையிடுக

 
Top