கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளும் எதிர்வரும் 12 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 

கடந்த தினங்களில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறாயினும் தற்போது கண்டி மாவட்டத்தில் அமைதியான சூழல் காணப்படுவதால் பாடசாலைகளை மீண்டும் 12 ஆம் திகதி ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top