தபால் மூல வாக்கு அட்டை உள்ளடக்கிய பொதிகளை விநியோகிப்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்று மேலதிக ஆணையாளர் எம் எம் மொகமட் தெரிவித்தார்.
உத்தியோக வாக்காளர் அட்டை தொடர்பான அறிவிப்பு ஆவணங்களை விநியோகிப்பதற்காக அவை தபால் திணைக்களத்திடம் எதிர்வரும் 18ஆம் திகதி ஒப்படைக்கப்படும்.

எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாவிட்டால் அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் ஆள் அடையாளஅட்டையை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறுமேலதிக தேர்தல் ஆணையாளர் எம் எம் மொகமட் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top