கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண வித்தியாரம்ப விழா நேற்று  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நடை பெற்றது.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் கல்வி வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இவ்விழா கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. அப்துல் நிஸாம் தலைமையில் நடை பெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட் சகோதரர் தேவ சந்தியாகு, மதப் பெரியார்கள்  உட்பட கல்வி அதிகாரிகளும் மற்றும் கல்முனை பிரதேச பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும்  கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாண்டில் பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட முதல் மாணவர்களை பதிவு  செய்த மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. அப்துல் நிஸாம் அம்மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகளும் வழங்கி வைத்தார். நிகழ்வில் தரம் 02 மாணவர்களின் கலை நிகழ்கவுளும் அரங்கேங்கேற்றப்பட்டன.

கருத்துரையிடுக

 
Top