2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகையை குறைத்து சமூகத்தில் சகல துறைகளுக்கும் சலுகைகளை வழங்குவதோடு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான யோசனைகள் அடங்கிய வரவு செலவுத்திட்டம் அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
தற்பொழுது உள்ள தொழிலாளர் மற்றும் வர்த்தக சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதின் அவசியங்களையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டங்கள் தொழிற்துறையை சார்ந்தவர்களுக்கும் ஊழியர்களுக்கும் நன்மைபயக்கும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்படவேண்டும். அத்தோடுநாட்டின் தேசிய வளப்பயன்பாட்டிற்கும் ஊக்குவிப்பதாக அமைய வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சுகாதாரம், பெருந்தோட்டம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் நலன் பெருந்தோட்ட துறை மக்களின் நலன் பல்கலைக்கழக கல்வி, போக்குவரத்து சுற்றுலா, கல்வி, கைத்தொழில், பல்கலைக்கழக கல்வி, பொதுக்கல்வி, போக்குவரத்து, கடல்வளத்தை மையமாகக் கொண்ட நீலப் பசுமை எண்ணக்கவிற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலான முன்மொழிவுகளை இன்று நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

நாட்டில் மாணிக்ககல் துறையை மேம்படுத்துவதற்கும் இதில் யோசனைகள் உள்ளடங்கியுள்ளன.

நீலப்பசுமை திட்டத்தின் கீழ் சுற்றாடலுக்கு உகந்த வாகன இறக்குமதி தொடர்பில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளையும் அமைச்சர் இன்று முன்வைத்தார்.

இதற்கமைவாக தற்சமயம் பாவனையில் உள்ள எரிபொருளி;ல இயங்கும் வாகனங்களுக்கு பதிலான சுற்றாடலுக்கு பொருந்தும் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான முன்மொழிவுகளும் இடம்பெற்றன.

இதன்கீழ் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களையும் கைபிறிட் என்ற கலப்பு வாகனங்களுக்கான இறக்குமதி வரிச்சலுகையையும் அமைச்சர் முன்மொழிந்தார்.
2040ம் ஆண்டளவில் மசகு எண்ணெக்கு பதிலாக மாற்று வலுசக்திகளை கொண்ட வாகனங்களுக்கான பயன்பாட்டிற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எமது அயல்நாடான இந்தியா இதற்கான திட்டத்தை 2035ஆம் ஆண்டளவில் பூர்த்திசெய்ய்திட்டமிட்டுள்ளதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2025ஆம் ஆண்டளவில் மின்சாரத்தில் இயங்கும் அல்லது கலப்பு வாகனங்களாக மாற்றப்படும். மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகளும் மின்சார பஸ் வண்டிகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இதற்கான இறக்குமதி வரியும் குறைக்கப்படும்.

புயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தமது முச்சக்கர வண்டிகளை பங்களாதேஷ் போன்ற ஏற்றுமதி செய்ய ஊக்குவிப்புகளும் வழங்கப்படவுள்ளன.

வாகனங்களுக்கான காபன் வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதிசொகுசு வாகனங்களுக்கு 25 இலட்சம் ரூபா வரி விதிக்கப்படவுள்ளது. அடுத்தவருடத்தில் இலங்கை போக்குவரத்திற்கு சபைக்கென மின்சாரத்திலியங்கும் 50 பஸ்வண்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்காக 50 கோடிரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
அரச ஊழியர்களுக்கான பொது சம்பள கொடுப்பனவு முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் விபரிக்கையில்,
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு பற்றி முழுமையாக ஆராயப்படவுள்ளது. அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்காக பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஓய்வூதியம் பெறுவோருக்கு வாழ்நாள் முழுவதும் அக்ரஹார காப்புறுதி முறைமையை தவணை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரச ஊழியர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான தீர்வையற்ற நிவாரணமும் வழமையான முறையில் அஅமுல்ப்படுத்தப்படவுள்ளது.

முச்சக்கரவண்டிகளை ஒழுங்குறுத்துவதற்கான அதிகார சபையொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதோடு முச்சக்கரவண்டி சாரதிகள் சுற்றுலா பயண வழிகாட்டிகளாக பயிற்றுவிக்கப்படுவார்கள்.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இணைந்து கொள்ளும் இலங்கை இராணுவ வீரர்களுக்கு விசேட பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

நிதி மோசடி, ஊழல் கூட்டாக இணைந்து குற்றச்செயல்கள் என்பன பற்றி வழக்குகள் தாமதமடைவதை தடுப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

நீதிமன்றங்களில் வழக்குகளை தாமதமடைவதை தடுப்பதற்காக நீதிமன்ற நிர்வாக முறைமை, உட்கட்டமைப்பு வசதிகள் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

கருத்துரையிடுக

 
Top