கல்முனை நகரில்  1883 ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை மெதடிஸ்த திருச் சபையினால் இயக்கப்பட்டு வருகின்ற வறிய மாணவர்களை பராமரித்து வரும் கல்முனை  கிறிஸ்தா  இல்ல  சிறுமியர் விடுதியின்  இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (03) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடை பெற்றது .

இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் சிவப்பு நிற அக்கின்ஸ் இல்ல மாணவிகளும் பச்சை நிற ஸ்பார்க் இல்ல மாணவிகளுமாக  இரண்டு இல்லங்களை சேர்ந்த மாணவிகள்  பங்கு பற்றியிருந்தனர் . 56 புள்ளிகளைப்  பெற்ற  பச்சை நிற ஸ்பார்க்  இல்லம்    சம்பியன் கிண்ணத்தை பெற்றதுடன் சிவப்பு நிற அக்கின்ஸ்  இல்லம் 50 புள்ளிகள் பெற்று  இரண்டாம் இடத்தைப் பெற்றது.

கல்முனை  கிறிஸ்தா  சிறுமியர் இல்லத்தில் பலதரப்பட்ட  வர்க்கத்தை சேர்ந்த வறிய மாணவிகள் 75 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் . இவர்களிடையே  நல்  ஒழுக்கத்தையும் ,கட் டுப்பாடையும் ,தலைமைத்துவ  பண்பையும்  கட்டியெழுப்புகின்ற  நோக்கில்  கல்முனை மெதடிஸ்த திருச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த இல்ல விளையாட்டுக்கள் நடந்தேறியது.

கல்முனை மெதடிஸ்த திருச் சபை போதகர் விநோத்  தலைமையில் போதகர் அம்மா கோகிலாவின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற இந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் போதகர் அருட் திரு சாம் சுபேந்திரன் பிரதம அதிதியாகவும் , கிழக்கு மாகாண கால் நடை அபிவிருத்தி சுகாதாரப் பணிப்பாளர் ஏ.எம்.முகம்மட் பாஸில் ,கல்முனை வலயக்  கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் உட்பட ஆசிரியர்கள் பலரும் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

ஒலிம்பிக் தீபத்துடன் ஆரம்பிக்கப் பட்ட  விளையாட்டுப் போட்டியை கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில்  மாணவர்களின் அணி நடை மரியாதை ,தவளைப் பாய்ச்சல் ,வாழைப்பழம் உண்ணுதல் ,வேக நடை ,குளிர்பானம் அருந்துதல் , உடற்பயிற்சி, சாக்கோட்டம் , தேசிக்காய் ஓட்டம் ,பூ கோர்த்தல் ,வினோத உடை ,நூறு மீட்டர்  ஓட்டம் ,மூன்று கால் ஒட்டம் , நிருவாக குழுவினர் மற்றும் நடுவர்களுக்கான விளையாட்டு ,பெற்றோருக்கான பலூன் ஊதி உடைத்தல் போட்டி என்பனவும் நடை பெற்றது.
நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட  போதகர் அருட் திரு சாம் சுபேந்திரன்,கிழக்கு மாகாண கால் நடை அபிவிருத்தி சுகாதாரப் பணிப்பாளர் ஏ.எம்.முகம்மட் பாஸில்,கல்முனை வலயக்  கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் ஆகியோர் கெளரவிக்கப் பட் டத்துடன் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் என்பன வழங்கி வைக்கப் பட்டன .

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை விளையாட்டு  ஆசிரியை  திருமதி ஜெ.ஆர்.ஜீவகடாச்சம்  பிரதம நடுவராகவும்  ஆசிரியர் றிஸ்மி மஜீத் ஆசிரியைகளான திருமதி வீ.பிரபாகரன் மற்றும் திருமதி என்.அமலநாதன் ஆகியோர் உதவி நடுவார்களாகவும் பணியாற்றி இல்ல விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடாத்தி முடித்தனர். போட்டிகளில் இடம்பெற்ற அத்தனை நிகழ்வுகளையும் மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்த போதகர் அம்மா திருமதி கோகிலா விசேட பரிசு வழங்கி கெளரவிக்கப் பட்டார் 
கருத்துரையிடுக

 
Top