இன்று நள்ளிரவு முதல் மென்பானங்களிலுள்ள சீனி அளவிற்கு ஏற்ப புதிய வரிமுறை அமுலுக்கு வருகின்றது. 
ஒருகிராமுக்கு 50 சதம் வீதம் புதிய வரி அறவிடப்படவுள்ளது.

திரவமற்ற மதுப்பொருட்களுக்கு இன்று நள்ளிரவு முதல் விசேட வரி அமுலுக்கு வருகின்றது.

மேலும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விளையாட்டு காலணிகளுக்கான வரியும் நீக்கப்படவுள்ளது.

இதேவேளை,
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 18ம் திகதி முதல் மதுபானங்களுக்கான தேசத்தை கட்டியெழுப்பும் வரி விதிக்கப்படவுள்ளது.

வாகனங்களுக்கான காபன் வரியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மோட்டார் சைக்கிளுக்காக நாளாந்தம் 17 சதமும் மோட்டார் காருக்கு ஒரு ரூபா 78 சதமும் பஸ் வண்டிக்கு இரண்டு ரூபா 74 சதமும் வரி விதிக்கப்படவுள்ளது.கருத்துரையிடுக

 
Top