1970 தொடக்கம் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள்ளான 20 வருடத்தில் கல்வி கற்பித்த ஆசிரியர்களின் “ மீன்டும் பள்ளிக்கூடம் செல்வோம்” ஒன்று கூடலும், பசுமை நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வும், மீன்டும் பள்ளிக்கூடம் செல்வோம் நூல் வெளியீடும் கல்லூரி நல்லதம்பி மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடை பெற்றது.

ஆசிரியர் ஜெபஸ் ஜோஸப்பின் முயற்சியினால் நடை பெற்ற இந்த ஒன்று கூடல் நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்த 75க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் பசுமை நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

1966ஆம் ஆண்டு இப்பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிய பேராசிரியர் சி.மௌனகுரு “ மீன்டும் பள்ளிக்கூடம் செல்வோம்” ஒன்று கூடலில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.“ மீன்டும் பள்ளிக்கூடம் செல்வோம்” நூலின் முதல் பிரதிகளை பேராசிரியர் சி.மௌனகுரு , அதிபர் பிரபாகரன் ,பிரதி அதிபர்கள் கலையரசன்,ஜெயசந்திரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்  

கல்முனையில் இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக திகழும் இப்பாடசாலை வரலாற்றில் இந்த ஒன்று கூடலானது கல்விச் சமூகத்தின் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துரையிடுக

 
Top